முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவரனுக்கு ரூ.248 குறைந்தது: தொடர்ந்து 4-வது நாளாக சரிந்த தங்கத்தின் விலை

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2022      வர்த்தகம்
Gold 2021 11 23

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து, ஒரு சவரன் ரூ.39,048-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

கடந்த வாரம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் இந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 22-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.39,672 ஆக இருந்தது. அது 23-ந்தேதி ரூ.39,560 ஆக குறைந்தது. 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறைநாள் என்பதால் அன்றும் அதே விலையில் நீடித்தது.

நேற்று முன்தினம் விலை மீண்டும் குறைந்து ரூ.39,296-க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் நேற்று ரூ.39,048-க்கு விற்கப்பனையானது. தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4912-க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ.4,881-க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.70.50-க்கு விற்கப்பட்டது. நேற்று வெள்ளி விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.70,500-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து