முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது: தோல்வி குறித்து ஜடேஜா கருத்து

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2022      விளையாட்டு
Jadeja 2022 04 18

Source: provided

மும்பை : சி.எஸ்.கே. அணி 6-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சாளர்கள் மீது அதிருப்தி அடைந்தார்.

பஞ்சாப் வெற்றி...

ஐ.பி.எல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி மீண்டும் பஞ்சாப் கிங்சிடம் தோற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. தொடக்க வீரர் ஷிகர் தவான் 59 பந்தில் 88 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), பனுகா ராஜபக்சே 32 பந்தில் 42 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பிராவோவுக்கு 2 விக்கெட் கிடைத்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் பஞ்சாப் 11 ரன்னில் வெற்றி பெற்றது.

6-வது தோல்வி...

அம்பத்தி ராயுடு 39 பந்தில் 78 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்) , ருதுராஜ் கெய்க்வாட் 27 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். ரபடா, ரிஷி தவான் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். சி.எஸ்.கே. அணி 6-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சாளர்கள் மீது அதிருப்தி அடைந்தார். இதுதொடர் பாக அவர் கூறியதாவது:- 

பந்துவீச்சு மோசம்...

எங்களது தொடக்கம் நன்றாகவே இருந்தது. புதிய பந்தில் நாங்கள் நேர்த்தியாக வீசினோம். ஆனால் கூடுதலாக 10 முதல் 15 ரன்களை விட்டு கொடுத்து விட்டோம். கடைசி 2 முதல் 3 ஓவர்களில் எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. 170 முதல் 175 ரன்னுக்குள் நாங்கள் பஞ்சாப்பை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். கடைசியில் பந்து வீச்சாளர்கள் மோசமாக செயல்பட்டனர்.

ராயுடுவுக்கு பாராட்டு...

பேட்டிங்கில் எங்களது தொடக்கம் சரியாக அமையவில்லை. முதல் 6 ஓவர்களில் ரன்கள் எடுக்கவில்லை. அம்பத்தி ராயுடுவின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. எங்களது ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை. நாங்கள் வலிமையுடன் திரும்புவோம். இவ்வாறு ஜடேஜா கூறி உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்தை மீண்டும் வருகிற 1-ந் தேதி சந்திக்கிறது. பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றியாகும். அந்த அணி அடுத்த போட்டியில் லக்னோவை வருகிற 29-ந் தேதி எதிர்கொள்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து