முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: பெய்ஜிங்கில் 2 கோடி பேருக்கு பரிசோதனை

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2022      உலகம்
China-Corona 2022-04-27

Source: provided

பெய்ஜிங் : சீனாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடிக்கிறது. தலைநகர் பெய்ஜிங்கில் 2 கோடி பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. 

சீனாவை கொரோனா வைரஸ் திணறிடித்து வருகிறது. அந்த நாட்டின் வர்த்தக தலைநகரான ஷாங்காய் நகரில் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக தலைநகர் பெய்ஜிங்கிலும் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் ஷாங்காய் நகரை போல பெய்ஜிங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என அச்சம் நிலவுகிறது.

இந்த நிலையில் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பெய்ஜிங்கில் உள்ள ஒரு பகுதி கொரோனாவுக்கான அதிக ஆபத்துள்ள பகுதியாகவும், மற்ற 7 பகுதிகள் நடுத்தர ஆபத்து பகுதிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

இதையடுத்து, பெய்ஜிங்கில் உள்ள சுமார் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய நகர நோய் தடுப்பு குழு நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. கடந்த திங்களன்று அங்கு ஒரே நாளில் 35 லட்சம் பேருக்கு 3 கட்ட கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே ஷாங்காய் நகரில் நேற்றுமுன்தினம் ஒரு நாளில் மட்டும் 58 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து