முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே பதவி விலகுவேன்: இலங்கை அதிபர்

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2022      உலகம்
rajapaksait-2022-04-24

Source: provided

கொழும்பு : நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே பதவி விலகுவேன் என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயா்ந்துள்ளது. எரிபொருள், மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் நீண்ட நேர மின்வெட்டும் நிலவுகிறது. இதனால், அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டம் நடத்தி. வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று அதிருப்தி எம்.பி.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்சே நிராகரித்திருந்தார்.  தொடர்ந்து, இலங்கை செய்தி நிறுவனத்திற்கு மகிந்த ராஜபக்சே அளித்த பேட்டியில் , இலங்கையின் ஒரு பகுதி மக்கள் மட்டுமே போராட்டம் நடத்துகின்றனர்.

அவர்கள் எப்போதுமே எங்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றனர் அவர்களுக்காக பதவி விலகுவது சாத்தியமல்ல.  ஒருவேளை நாடாளுமன்றத்தில் எனது பெரும்பான்மையை இழந்தால் நான் பதவி விலகுகிறேன். தற்போது மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பினால், தேர்தல் மூலமாக மாற்றத்தை ஏற்படுத்தட்டும். 

ஆனால், எங்களுடைய வாக்காளர்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள். அடுத்த தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். தற்போதைய போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த மக்களின் பிரதிபலிப்பு அல்ல. அதேநேரத்தில் அவர்களின் கருத்துகள் மதிக்கப்படும். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை விரைவில் சரி செய்வோம். அதற்காக  இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து