முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கில் ஆங்சான் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை : மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2022      உலகம்
Aongsan-Sookie 2022-04-27

Source: provided

ரபாங்காங் : ஊழல் வழக்கில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூகி குற்றவாளி என மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 76 வயதான ஆங்சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அரசை கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் கலைத்தது. இதனை தொடர்ந்து அரசின் தலைமை ஆலோசகராக இருந்த ஆங் சாங் சூகியும் கைது செய்யப்பட்டார்.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது, முறைகேடாக வாக்கி டாக்கி வாங்கியது, மக்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டியது மற்றும் ஊழல் என அவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது.

இதில், அரசியல் தலைவர் ஒருவரிடம் இருந்து தங்கம் மற்றும் பலஆயிரம் டாலர்களை லஞ்சமாக பெற்றதாக சூகிக்கு எதிரான ராணுவ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணைகள் முடிந்துள்ளது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பை நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.

இந்த நிலையில், ஊழல் வழக்கில் ஆங்சான் சூகி குற்றவாளி என மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து