முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி ஆவணங்கள் தொடர்பான வழக்கு: நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2022      சினிமா
Madurai-High-Court 2021 12

நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய கோரி மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவில் நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை  கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் தனுஷ் தனது மகன் என மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசரனை நடைபெற்றது. அப்போது நடிகர் தனுஷ் தரப்பில் தக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், போலியான ஆவணங்கள் இருப்பதாக கதிரேசன் அளித்த புகாரின் அடிப்படையில் முறையாக விசாரித்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

ஆனால் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-6 வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழின் உண்மைத்தன்மையை அறியும் விதமாக கீழமை நீதிமன்றம் அதனை மதுரை மாநகராட்சிக்கு அனுப்பி இருந்தது. ஆனால் அதன் முடிவுகள் இதுவரை வழங்கப்படாத நிலையில் அதனை கருத்தில் கொள்ளாமலேயே நீதித்துறை நடுவர் வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

இது ஏற்க தக்கது அல்ல. ஆகவே நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த போலியான ஆவணங்கள் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரிப்பது தொடர்பாக வழக்கை தள்ளுபடி செய்த நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் வழக்கை முறையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என  மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கானது நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நடிகர் தனுஷுக்கு நோட்ஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!