முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கதாநாயகியாக களம் இறங்கும் சச்சின் டெண்டுல்கரின் மகள்..!

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2022      விளையாட்டு
Sarah-Tendulkar 2022-04-27

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர். மருத்துவ படிப்பை முடித்துள்ள சாரா நடிப்பில் ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது. அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் சுயவிவரத்தில் ஸ்டைல் குறிப்புகள், படங்கள், பயண குறிப்புகள் போன்றவைகளால் நிரம்பி வழிகின்றன. 2021-ல் மாடலிங் துறையில் அவர் அறிமுகமானபோது, சாரா பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைப்பார் என்ற பேச்சுகள் எழுந்தன.

இந்நிலையில், சாரா விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிப்பில் மிகவும் ஆர்வமாக இருக்கும் அவர், சில பிராண்ட்களில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும், நடிப்பு வகுப்புகளுக்கு சென்று வருவதாகவும் பிரபல பாலிவுட் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. “பெரும்பாலும் தன்னைப் பற்றி வெளியில் எதையும் தெரிவிக்காத சாரா, தனது நடிப்பு திறமையால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தக்கூடும். அவர் மிகவும் திறமையானவர், அவருடைய பெற்றோர் சாரா எடுக்கும் முடிவை ஆதரிப்பார்கள்” என சாராவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பராகிற்கு கை கொடுக்க  மறுத்த ஹர்சல் படேல்

ஐபிஎல் கிரிக்கெட்டின் 39-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் மற்றும் பெங்களூர் அணி வீரர் ஹர்சல் படேல் ஆகியோர் மோதிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் அதிகமாக எடுக்காத நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பராக் 56 ரன்கள் எடுத்து அணிக்கு கெளவுரமான ஸ்கோரை எடுத்து கொடுத்தார். 

ஹர்சல் படேல் வீசிய கடைசி ஓவரில் பராக் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். ஓவர் முடிந்து அனைத்து வீரர்களும் ஓய்வு அறைக்கு செல்லும் போதுதான் இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பெங்களூர் அணி களமிறங்கி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. கடைசி விக்கெட்டான ஹர்சல் படேல் சிக்சர் அடிக்க முயன்ற போது பராகிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் சிரித்தப்படியே அந்த கேட்ச்சை பிடிப்பார். இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு அனைத்து வீரர்களும் கை கொடுப்பார்கள். அதன்படி பராக் கை கொடுக்க வரும் போது ஹர்சல் படேல் அவருக்கு கை கொடுக்காமல் சென்று விடுவார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வருகிற 30-ம் தேதி காஞ்சீபுரத்தில்  மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது., காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டுப்பிரிவின் சார்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி (ஆண்களுக்கு மட்டும்) வருகிற 30-ந் தேதி காலை 9 மணிக்கு காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது. போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடத்தப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 29-ந் தேதி அன்று மாலை 5 மணிக்குள் காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அணிகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகள் மண்டலப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களில் பயிலும், பணிபுரியும் வீரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நோ-பால் சர்ச்சையால் ரிமோட்டை உடைத்த டெல்லி பயிற்சியாளர் ..!

15 ஆவது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதன் 34 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி அணி வெற்றிப்பெற்றது.

இது குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், "நான் அந்த காட்சிகளை கண்டு வெறுப்பில் இருந்தேன். அதனால் 3-4 டிவி ரிமோட்களை உடைத்துவிட்டேன். தண்ணீர் பாட்டில்களை சுவரில் எறிந்து உடைத்தேன். ஒரு பயிற்சியாளராக களத்தில் இது மாதிரியான விஷயங்கள் நடக்கும்போது கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் கடினம். ஆனால் மைதானத்தில் இல்லாமல் வெளியே இருப்பது இன்னும் வெறுப்பான விஷயம் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து