முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியாவில் அதிர்ச்சி சம்பவம்: 30 ஆண்டுகளாக கழிவறையில் சமோசா தயார் செய்த உணவகம்

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2022      உலகம்
samosa 2022-04-27

Source: provided

ஜெட்டா : சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளாக கழிவறையில் சமோசா தயார் செய்த உணவகத்தால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 30 ஆண்டு பழமையான உணவகத்தின் பணியாளர்களுக்கு சுகாதார அட்டைகள் எதுவும் இல்லை. சட்ட விதிகளை மீறியுள்ளது தெளிவாக அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது.

சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உணவகம் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. இந்நிலையில், நகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்டனர். அதில், அவர்களுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. 30 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அந்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட பிற பலகாரங்கள் கழிவறையில் வைத்து தயாரிக்கப்பட்டு வந்துள்ளன.

அந்த கழிவறையிலேயே மதிய உணவு உள்ளிட்ட பிற உணவுகளும் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதுதவிர காலாவதியான இறைச்சி மற்றும் பாலாடை கட்டி ஆகியவையும் அந்த உணவகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவற்றில் சில 2 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி இருந்தன. பூச்சிகளும், எலிகளும் உணவகத்தில் ஓடி, ஆடியபடி இருந்தன.

30 ஆண்டு பழமையான உணவகத்தின் பணியாளர்களுக்கு சுகாதார அட்டைகள் எதுவும் இல்லை. சட்ட விதிகளை மீறியுள்ளது தெளிவாக அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த உணவகம் பூட்டப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து