முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மீது மர்ம நபர் தக்காளி வீச்சு

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2022      உலகம்
adhipar-makron-2022-04-28

Source: provided

பாரிஸ் : இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரான் மீது மர்ம நபர் தக்காளி வீசிய சம்பவம் நடந்துள்ளது. 

பிரான்ஸ் நாட்டிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன் தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர்  இமானுவேல் மேக்ரான், பிரதான எதிர்க்கட்சியான ஆர்.என்.எனப்படும் நேஷனல் ரேலி கட்சியின் மரின் லீ பென் உட்பட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இமானுவேல் மேக்ரான் 58 சதவீதத்துக்கு மேல் ஓட்டுகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வானார்.

தேர்தல் வெற்றியை கொண்டாட நேற்றுமுன்தினம் அதிபர் மேக்ரோன், பாரிசின் வடமேற்கில், செர்ஜி பகுதியில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் மீது குறிவைத்து எங்கிருந்தோ தக்காளி வீசப்பட்டது. உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாவலர்கள் தயாராக வைத்திருந்த குடையை விரித்து மேக்ரோனை அங்கிருந்த பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதன் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  கடந்த அக்டோபரில் லியோன் நகர் சென்றிருந்த போது மேக்ரோன் மீது முட்டை வீசப்பட்டது. அதே போல், சில மாதங்களுக்கு முன்பு, மென்ரோன் கன்னத்தில் ஒருவர் அறைந்தார். இப்போது அவர் மீது தக்காளி வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து