முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு லட்சம் டாலர் முதலீடு செய்தால் 10 ஆண்டுகளுக்கு கோல்டன் விசா இலங்கை அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2022      உலகம்
ilangai-visa-2022-04-28

Source: provided

கொழும்பு : இலங்கையில் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கு முதலீடு செய்வோர் கோல்டன் விசா திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் வரை இலங்கையில் தங்கி தொழில் செய்யலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

அந்நிய செலவாணி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடனுதவி, பொருட்கள் உதவி ஆகியவற்றை வழங்கி வருகின்றன. 

இந்நிலையில் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசு அறிவித்துள்ளது.  இதன்படி இலங்கையில் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கு முதலீடு செய்வோர் கோல்டன் விசா திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் வரை இலங்கையில் தங்கி தொழில் செய்யலாம் என்ற அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும் 75 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புக்கு அடுக்குமாடி கட்டிடங்கள் வாங்கும் நபர்களுக்கு ஐந்து ஆண்டு விசா வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் இலங்கை நாட்டின் முதலீடுக்கு உதவும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து