முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப்: சிந்து, சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2022      விளையாட்டு
Sindhu-2022-04-28

பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து, சாத்விக்-சிராக் ஜோடி 

காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. சீன வீராங்கணை ஹீ பிங் ஜியோவை ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வீழ்த்தி சிந்து வெண்கலம் வென்றுள்ளார்.

மணிலாவில்...

பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாவில்  நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில்  மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை யூ யான் ஜேஸ்லின் ஹூய்யை வீழ்த்திய பிவி சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்திய வீராங்கணை பிவி சிந்து,  21-16, 21-16 என்ற செட் கணக்கில் சேஸ்லின் ஹூய்யை வீழ்த்தினார். இதை தொடர்ந்து அவர் சீனாவின் ஹீ பிங் ஜியோவுடன் மோதவுள்ளார்.

இரட்டையர் பிரிவு... 

சீன வீராங்கணை ஹீ பிங் ஜியோவை ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வீழ்த்தி சிந்து வெண்கலம் வென்றுள்ளார். பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷின் ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் சாத்விக் சாய்ராஜ் ராணிக்ரெட்டி, சிரங் செட்டி ஜோடி 21-17 மற்றும் 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகிரா கோமா மற்றும் தைச்சி சைட்டோவை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறியது.

சாய்னா தோல்வி...

 

மற்றொரு வீராங்கனையான சாய்னா நெஹ்வால் சீன வீராங்கணை வாங் ஜி யியுடன் மோதினார். இதில் சாய்னா 21-12, 7-21, 13-21 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியை தழுவினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து