முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் மாணவர்கள் முடி வெட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2022      உலகம்
hair-cut-2022-04-29

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கத்திய பாணியில் மாணவர்கள் முடிவெட்ட தலிபான்கள் தடை விதித்து உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்கரவாதிகள் நடத்தி வந்த நீண்டகால போர் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் முடிவுக்கு வந்தது.  அமெரிக்க படைகளின் வாபசை தொடர்ந்து, தலிபான்களின் கைவசம் ஆட்சி சென்றது. இந்த நிலையில், தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.  

இதன்படி, சமீபத்தில் ஹெராத் மாகாணத்தில் உள்ள சலூன் கடைகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானிய ஆடவர்களில் அதிலும் குறிப்பிடும்படியாக மாணவர்களுக்கு மேற்கத்திய தாக்கம் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக மேற்கத்தியர்களை போன்று முடிகளை வெட்ட கூடாது என அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.  அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவிகள் வகுப்பறையில் கட்டாயம் புர்கா அணிய வேண்டும் என்றும் தலிபான்கள் எச்சரித்து உள்ளனர். இதற்கு முன்பும் இதே போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு மக்கள் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து