முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனுக்கு 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேற்றம்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2022      உலகம்
doller-usn022-04-29

Source: provided

வாஷிங்டன் : 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவம் மற்றும் இதர உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. 

அமெரிக்க அதிபர் ஜோபைடன், அமெரிக்க பிரதிநிதிகள் சபையிடம், உக்ரைனை ஆதரிப்பதற்காக 30 பில்லியன் டாலர் கேட்டு இருந்தார். அத்துடன், ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகள் மற்றும் ரஷ்யாவின் சொத்துக்களை பறிப்பதற்கான புதிய சட்ட விதிமுறைகளையும் கேட்டு இருந்தார். இந்த நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் உக்ரைனுக்கு 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்டரஸ், உக்ரைன் தலைநகர் கீவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தென் கிழக்கு உக்ரைன் நகரமான மரியுபோலில் போராளிகளும் பொதுமக்களும் பதுங்கி இருக்கும் எஃகு ஆலையை விட்டு அவர்களை வெளியேற்றுவதற்கான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து