முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் கோலி, ரோகித் ஃபார்முக்கு திரும்புவர்: பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2022      விளையாட்டு
Ganguly-2022-04-29

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா நிச்சயம் ஃபார்முக்கு திரும்புவார்கள் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி.

128 ரன்கள் மட்டும்...

நடப்பு ஐ.பி.எல்சீசனில் 9 போட்டிகளில் விளையாடி வெறும் 128 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி. அவரது மோசமான பார்ம் குறித்து பலரும் பேசி வருகின்றனர். நடப்பு சீசனில் ஐந்து முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்துள்ளார் கோலி. இதில் இரண்டு முறை டக் அவுட்டாகி உள்ளார். இந்நிலையில், கோலி குறித்து பேசியுள்ளார் கங்குலி.

மகத்தான வீரர்...

"கோலி மகத்தான வீரர். அவர் நிச்சயம் ஃபார்முக்கு திரும்புவார். விரைவில் ரன்கள் குவிக்க தொடங்குவார் என நினைக்கிறேன். விராட் கோலி என்ன நினைக்கிறார் என்பது எனக்கு தெரியாது. ஆனாலும் அவர் ஃபார்முக்கு திரும்புவது உறுதி" என கங்குலி தெரிவித்துள்ளார். அதே போல மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் ஃபார்முக்கு திரும்புவார் எனத் தெரிவித்துள்ளார் கங்குலி.

உம்ரான் மலிக்...

இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பு மாற்றம் கண்ட போது கோலி மற்றும் கங்குலி என இருவருக்கும் இடையே கருத்து முரண் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல்சீசன் போட்டிகளை பார்த்து வருவதாகவும். ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் உம்ரான் மலிக் அபாரமாக விளையாடி வருவதாகவும் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து