முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2022      விளையாட்டு
PV-Sindhu-2022-04-29

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் பி.வி.சிந்து. நேற்று நடந்த காலிறுதி போட்டியில் பிவி சிந்து , சீனாவை சேர்ந்த ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டார்.

காலிறுதிக்கு தகுதி...

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில், ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.  இதில் சிங்கப்பூர் வீராங்கனை யு யான் யாஸ்லினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 

அரையிறுதிக்கு...

இந்நிலையில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் பிவி சிந்து , சீனாவை  சேர்ந்த ஹி பிங் ஜியாவோவை  எதிர்கொண்டார்.  இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 21-9 கணக்கில் பி.வி ,சிந்து கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுத்து இரண்டாவது செட்டை 13-21 என்று ஹி பிங் ஜியாவோ கைப்பற்றினார் . இதை தொடர்ந்து நடைபெற்ற பரபரப்பான 3 வது செட்டில் சிறப்பாக விளையாடிய பிவி சிந்து 21-19 என கைப்பற்றினார். இதன்மூலம் 21-9 ,13-21,21-19 என்ற செட் கணக்கில் ஹி பிங் ஜியாவோவை வீழ்த்தி  பி.வி.சிந்து  வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து