முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணியில் பேட் கம்மின்ஸ் இடம் பெற்றிருக்க வேண்டும்: யுவ்ராஜ்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2022      விளையாட்டு
Yuvraj-2022-04-29

ஐபிஎல் கிரிக்கெட்டின் 41-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் பந்து வீச்சில் 4 பவுலர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். 5-வது பவுலராக ரசல் இருந்தார். இந்த போட்டியில் டிம் சவுத்தி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இவருக்கு பதிலாக பேட் கம்மின்ஸ் அணியில் இருந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

இந்நிலையில் கொல்கத்தா அணியில் ஆல் ரவுண்டர் பேட் கம்மின்ஸ் இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது., ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் கொல்கத்தா அணியில் இடம் பெறாதது ஆச்சரியமாக உள்ளது. 2 போட்டிகளில் சரியாக விளையாடாததால் அணியில் சேர்க்காதது சரியான முடிவு இல்லை. அவர் இடம் பெற்றிருந்தால் கொல்கத்தா அணி 2 அல்லது 3 வெற்றிகளை பெற்றிருக்க முடியும். இது என்னோட தனிப்பட்ட கருத்து. இவ்வாறு யுவ்ராஜ் சிங் கூறினார்.

சோயிப் அக்தரின் பந்துவீச்சை  நினைவு கூர்ந்த டிவில்லியர்ஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர். 2002- ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது இவர் மணிக்கு 161 கிமீ வேகத்தில் வீசிய பந்து தான் தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் வேகமான பந்தாகும். சச்சின் , பாண்டிங் போன்ற முன்னணி ஜாம்பவான்களுக்கு பந்துவீச்சில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். இவர் 161 கிமீ வேகத்தில் பந்துவீசியதன் 20-ஆம் ஆண்டை முன்னிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் அந்த நிகழ்வை நினைவு கூர்ந்து பதிவிட்டு இருந்தது.

இதற்கு பதில் டுவீட் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் சோயிப் அக்தரை குறிப்பிட்டு, "உங்கள் பந்துவீச்சை நினைத்து இப்போதும் தூக்கமில்லாத இரவுகள் உண்டு " என தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த அக்தர், "நீங்களே பல பந்துவீச்சாளர்களுக்கு தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுடன் தொடர்புகொள்வதில் எப்போதும் மகிழ்ச்சி" என தெரிவித்தார். மீண்டும் அதற்கு பதிலளித்த டிவில்லியர்ஸ், " நல்ல கடந்த காலங்கள். என் இருபது வயதின் தொடக்கத்தில் சூப்பர்ஸ்போர்ட் பூங்காவில் நடைபெற்ற போட்டியில் நீங்கள் வீசிய பந்தின் மூலம் என் காலை கிட்டத்தட்ட உடைத்து விட்டீர்கள் " என தெரிவித்துள்ளார்.

உம்ரான் மாலிக்கை  புகழ்ந்த ப.சிதம்பரம்

நடப்பு ஐபிஎல் சீசனில் அதிவேகமாக பந்துவீசி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகிறார் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக். அவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் இதுவரை மொத்தம் 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். மணிக்கு சராசரியாக 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசி வருகிறார் உம்ரான்.

அதன் காரணமாக இந்நாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் எனப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரமும் இளம் வீரர் உம்ரான் மாலிக்கை பாராட்டியுள்ளார் . "உம்ரான் மாலிக் எனும் சூறாவளி தனது பாதையில் குறுக்கிடும் அனைத்தையும் துவம்சம் செய்கிறது. என்னவொரு வேகம். என்னவொரு ஆக்ரோஷம். நடப்பு ஐபிஎல் சீசன் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ள முத்தான சிறந்த வீரர் அவர் தான் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து, கூடிய விரைவில் தேசிய அணியிலும் அவரை சேர்க்க வேண்டும்" என ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து