முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்கு சூடானில் அமைதி பணியில் ஈடுபட்ட 1,000 இந்திய வீரர்களுக்கு ஐ.நா. விருது

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      உலகம்
UN-Award 2022-04-30

ஐ.நா., சார்பில் தெற்கு சூடானில் அமைதி பணியில் ஈடுபட்ட 1,100-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களுக்கு ஐக்கிய நாடுகள் விருது வழங்கப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்ததற்கு இந்த விருது கிடைத்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தெற்கு சூடானுக்கான ஐ.நா., இயக்கத்தில், அமைதி பணியாளர்கள் பொது மக்களின் உயிரை மட்டும் காக்கவில்லை. 1,160 இந்திய வீரர்கள், தெற்கு சூடானில் சாலைகளை கட்டமைத்ததுடன், உள்ளூர் சமுதாய மக்கள் இடையே பிணைப்பை ஏற்படுத்தினர். மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதற்காக அவர்கள் ஐ.நா. விருது பெற தகுதி பெற்றவர்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விருது பெற்ற வீரர்கள் அனைவரும் அப்பர் நைல் ஸ்டேட்டில் பணிபுரிந்து வருகின்றனர். அந்நாட்டில், மலகல் முதல் அப்வங் வரையிலும் மற்றும் பல வழிகளில் இந்திய பொறியாளர் பிரிவினர் சாலை அமைத்து தந்துள்ளனர். விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க மொபைல் கிளினிக்குகளை அமைத்து, பசு, ஆடு, கழுதை உள்ளிட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இந்த தகவல், ஐ.நா.வின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து