முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெப்ப நிலை அதிகரிப்பு எதிரொலி: மே 14- முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை அறிவித்தது பஞ்சாப் மாநில அரசு

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      இந்தியா
Bhagwant-Maan 2022-04-30

Source: provided

சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் கடும் வெப்ப நிலை காரணமாக, மே 14-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக, பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப நிலை சாதாரண வரம்புகளை விட சில புள்ளிகள் அதிகமாகவே காணப்படுகிறது. அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியசும், லூதியானாவில் 43.2 டிகிரி செல்சியசும் மற்றும் ஜலந்தரில் 42.7 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது. 

இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இது குறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக ஆயிரக்கணக்கான பொற்றோர்களும், ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு மே 14-ம் தேதி முதல் பஞ்சாபின் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று  குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து