முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் உ.பி முதல்வர் யோகி

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      இந்தியா
Yogi-Adityanath 2022 02 26

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார்.

உ.பி மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்ற பிறகு, அவர் இரண்டு முறை டெல்லி சென்றுள்ளார். முன்னதாக யோகி ஆதித்யநாத் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த போது அமித்ஷாவை சந்தித்தார். அப்போது, மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி மற்றும் நிர்வாக முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், நேற்று முதல்வர் யோகியுடன் பிரதிநிதிகளான கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து