முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      இந்தியா
Manoj-Pandey 2022-04-30

Source: provided

புது டெல்லி : இந்திய ராணுவத்தின் புதிய  தலைமைத் தளபதியாக பி.எஸ்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளாா். நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். 

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான எம்.எம். நரவனேவின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக இதற்கு முன்பு துணை தலைமை தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.  தொடர்ந்து, ராணுவத்தின் புதிய துணை தலைமைத் தளபதியாக பி.எஸ்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளாா். இவரும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.  

இதையடுத்து, ஓய்வுப் பெற்ற ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே மற்றும் அவரது மனைவி வீணா நரவனே ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோரை ராஷ்டிரபதி பவனில் சந்தித்து பேசினர்.  பின்னர் பாதுகாப்பு துறை அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

42 ஆண்டுகள் நாட்டுக்கா சேவையாற்றி ஓய்வுபெற்ற ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவனே உடனான அற்புதமான சந்திப்பு. ராணுவத் தலைவராக அவர் ஆற்றிய பங்களிப்புகள் நாட்டின் பாதுகாப்புத் திறன்களையும் தயார்நிலையையும் வலுப்படுத்தியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.   பொறியாளர்கள் பட்டாளத்தை சேர்ந்த ஒரு அதிகாரி ராணுவப் படையின் துணைத் தளபதியாக நியமிக்கப்படும் முதல் நபர் பி.எஸ் ராஜூ ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து