முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      விளையாட்டு
Gujarat-Titans 2022-04-30

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் டூ பிளஸிஸ் தலைமையிலன பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்க் தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளஸ்சிஸ் ,விராட் கோலி களமிறங்கினர் .

டு பிளஸ்சிஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் .பின்னர் ரஜத் படிதார் கோலியுடன் இணைந்து நிதானமாக  விளையாடினார் .

இருவரும் இணைந்து பந்துகளை சிக்ஸர் ,பவுண்டரிக்கு விரட்டினர் . விராட் கோலி 45 பந்துகளிலும் ,ரஜத் படிதார் 29  பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.தொடர்ந்து விளையாடிய  ரஜத் படிதார் 52 ரன்களில் ஆட்டமிழந்தார் . தொடர்ந்து விராட் கோலி 58 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார் . பின்னர்  கிளென் மேக்ஸ்வெல் மட்டும்  அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார் .அவர் 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது .இதனை தொடர்ந்து 171 ரன்கள் இலக்குடன் குஜராத் அணி விளையாடியது.  அணியின் தொடக்க வீரர்களாக சாகாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். 

சாகா 29 ரன்னிலும், கில் 31 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த தமிழக வீரரான சாய் சுதர்ஷன் 20 ரன்கள் எடுத்து ஆட்டகிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 ரன்னில் வெளியேறினார்.

இதையடுத்து டேவிட் மில்லரும் (39), திவாட்டியாவும் (43) அணியை சரிவில் இருந்து மீட்டு இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து