முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் புகழ்பெற்ற 1,000 கின்னீஸ் குதிரை பந்தயம் - சுற்றுலா பயணிகள் கண்டுரசிப்பு

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      விளையாட்டு
Ooty-horse 2022-04-30

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே கோடை சீசனில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இவர்களை கவர்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரை பந்தயங்கள் ஊட்டியில் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்த ஆண்டுக்கான புகழ்பெற்ற குதிரைப் பந்தயம் கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தன்று தொடங்கியது. ஊட்டியில் நடக்கும் குதிரை பந்தயங்களில், 1,000, 2,000 கின்னீஸ், நீலகிரி தங்க கோப்பை, டர்பி ஆகியவை முக்கிய பந்தயங்களாகும். 

மொத்தம் நடந்த , 8 பந்தயங்களில், 5-வது பந்தயம், 1,000 கின்னீஸ் பந்தயமாகும். அதில், 1,400 மீட்டர் துாரத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்ப்பட்டு, 8 குதிரைகள் பங்கேற்றன.

இதில் ஆசாத் அஸ்பர் என்ற ஜாக்கி ஓட்டிய ரெமிடோ சாஸ்பிரிங் என்ற 5-ம் எண் கொண்ட குதிரை 1.31 நிமிடத்தில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தது. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

இதை தொடர்ந்து 1,000 கின்னீஸ் கோப்பைக்கான பந்தயத்தில் வெற்றி பெற்ற ரெமிடோ சாஸ்பிரிங் என்ற குதிரையின் உரிமையாளர், பயிற்சியாளர் மற்றும் ஜாக்கிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டன.

முன்னதாக 4-வது பந்தயத்தின் போது வீரர் ஒருவர் போட்டி தூரத்தை கடந்ததும் குதிரையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதை தொடர்ந்து ஆம்புலன்சை வரவழைத்து, மயங்கிக் கிடந்த வீரரை உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து