முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன் வீரருக்கு உயரிய விருது மரணத்துக்கு பிறகு அரசு வழங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      உலகம்
UKRAIN-VEERAR-2022-05-01

Source: provided

லண்டன் : ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்துள்ளன. என்றாலும் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வரு கிறது.

இந்நிலையில் போரின் முதல்நாளிலேயே ரஷ்யாவின் 10 விமானங்களை உக்ரைன் விமானி ஒருவர் சுட்டு வீழ்த்தினார். இதனால் உலகம் முழுவதும் பிரபலமான அந்த விமானி கோஸ்ட் ஆப் கீவ் (கீவ் நகரின் பேய்) என அழைக்கப்பட்டார். தொடர்ந்து போரில் மிகவும் தீவிரமாகவும் திறமையாகவும் செயல்பட்ட அந்த விமானியை  கோஸ்ட் ஆப் கீவ் என்றே உக்ரைன்அடையாளப்படுத்தி வந்தது. தங்கள் வீரர்களை உற்சாகப்படுத்தவே இப்படி ஒருகற்பனை கதாபாத்திரத்தை உக்ரைன் உருவாக்கியுள்ளது என விமர்சனமும் எழுந்தது. 

இந்நிலையில் கோஸ்ட் ஆப் கீவ் என அறியப்பட்ட அந்த விமானிகடந்த மாதம் நடந்த போரில் வீரமரணம் அடைந்தாக டைம்ஸ் ஆப் லண்டன் இதழ் தெரிவித்துள்ளது.  துணிச்சல் மிகுந்த அந்த விமானியின் பெயர் ஸ்டெபான் தரபால்கா (29) எனவும், ஒரு குழந்தைக்கு தந்தை எனவும் உக்ரைன் அதிகாரிகள் கூறியதாக அந்த இதழ் தெரிவித்துள்ளது.  அவருக்கு உக்ரைன் ராணுவத்தின் மிக உயரிய விருதை அந்நாட்டு அரசு வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் உக்ரைன் கதாநாயகன் என்ற பட்டமும் ஸ்டெபானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு டைம்ஸ் ஆப் லண்டன் இதழ் கூறியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து