முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 8 ஆண்டுகளில் மருந்து ஏற்றுமதி 103 சதவீதம் வளர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      இந்தியா
Central-government 2021 07

Source: provided

 மத்திய அரசு தகவல்

புது டெல்லி, கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் மருந்து ஏற்றுமதி 103 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் மருந்து ஏற்றுமதி 2013-14-ம் ஆண்டில் இருந்து 103 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2013-14-ம் ஆண்டில் ரூ.90,415 கோடியாக இருந்த  மருந்து ஏற்றுமதி, கடந்த  2021-22-ம் ஆண்டில் ரூ.1,83,422 கோடியாக  அதிகரித்துள்ளது.  முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 2021-22-ம் ஆண்டில் மருந்து ஏற்றுமதியில் சாதனை படைத்து அத்துறையில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய ஆண்டாக அமைந்தது. கடந்த  8 ஆண்டுகளில் ஏறக்குறைய ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் ஏற்றுமதி என்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

உலகளவில் நிலவிய வர்த்தக இடையூறுகள் மற்றும் கொரோனா  தொடர்பான மருந்துகளுக்கான தேவை குறைந்த போதிலும் கடந்த 2021-22-ம் ஆண்டில் மருந்து ஏற்றுமதிகள் நேர்மறை வளர்ச்சியைத் தொடர்ந்தன. 15,175.81 மில்லியன் அமெரிக்க டாலர் உபரித் தொகையுடன் நாட்டின் வர்த்தக சமநிலை  சாதகமாகத் தொடர்கிறது. மருந்துகளுக்கான விலை, போட்டித்தன்மை மற்றும் நல்ல தரம் ஆகியவற்றின் காரணமாக, உலக அளவில் இந்திய மருந்து நிறுவனங்கள் முத்திரை பதித்துள்ளன. உலகின் 60 சதவீத தடுப்பூசிகள் மற்றும் 20 சதவீத மலிவு விலை  மருந்துகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  உலகளவில் மருந்து உற்பத்தியில் இந்தியா 3-வது இடத்தையும், அதன் மதிப்பில் 14-வது இடத்தையும் பெற்றுள்ளது.   இந்திய மருந்துத் துறையின் தற்போதைய சந்தை அளவு சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 2013-14-ம் ஆண்டைக் காட்டிலும், கடந்த 2021-22-ம் ஆண்டில் இந்தியாவின் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி  பியூஷ் கோயல் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து