முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மக்களுக்கு உதவும் தீர்மானம் அரசியல் லாபமாக மாறி விடக்கூடாது : முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      தமிழகம்
Annamalai 2022 04 12

Source: provided

சென்னை : இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி கேட்டு தமிழக அரசு சட்ட சபையில் நிறைவேற்றி இருக்கும் தீர்மானம் அரசியல் லாபமாக மாறி விட கூடாது என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். 

இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம். வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்க ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தியபோது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை அரசியல் லாபம் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருந்தது. அதேபோன்ற செயலாக தற்போதைய தீர்மானமும் மாறிவிடக்கூடாது.  சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கைக்கு நமது நாடு ஏற்கனவே உதவி வழங்கி வருவதில் உள்ள தகவல்கள் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. 

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.  ஒட்டுமொத்த அடிப்படையில், 2022-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை மக்களுக்கு இந்திய ஆதரவு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கி உள்ளது. 4 லட்சம் டன் எரிபொருள் 10 லட்சம் டன் சரக்குகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் கூடுதலாக ஒரு பில்லியன் கடன் வசதியின் கீழ் சுமார் 40,000 டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தை உயர்த்த உதவும். பிப்ரவரியில், பெட்ரோலியப் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு உதவியாக குறுகிய கால கடனாக இந்தியா 500 பில்லியன் டாலர்கள் வழங்கியது. நவம்பரில் 100 டன் நானோ நைட்ரஜன் திரவ உரங்களையும் வழங்கி இருப்பதை கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து