முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளை தரம் உயர்த்தாவிட்டால் மக்களே என்னை வெளியேற்றலாம் : குஜராத்தில் கெஜ்ரிவால் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      இந்தியா
Kejriwal 2021 12 13

Source: provided

ஆமதாபாத் : பள்ளிகளை தரம் உயர்த்தாவிட்டால், மக்களே என்னை வெளியேற்றலாம் என குஜராத் மக்களிடம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஜராத் சட்டசபைக்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில், குஜராத்தின் பரூச்சில் நடந்த நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் பேசியதாவது:-

மாநிலத்தில் 6 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன. லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. அவர்களின் எதிர்காலத்தை மாற்றி காட்டுவோம். டெல்லியில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதை போல், இங்கும் செய்வோம்.கேள்வித்தாளை கசிய விட்டு தேர்வுகளை நடத்தும் நிலையில் பா.ஜ.க. உள்ளது.

எந்த ஒரு தேர்வையாவது, கேள்வித்தாள் கசியாமல் நடத்தி காட்ட முடியுமா என முதல்வர் பூபேந்திர படேலுக்கு சவால் விடுகிறேன். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். மாநிலத்தில் பள்ளிகளை தரம் உயர்த்தாவிட்டால், மக்களே என்னை வெளியேற்றலாம்.

டெல்லியில் பணக்கார மற்றும் ஏழை குழந்தைகள் ஒன்றாக படிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு 4 லட்சம் குழந்தைகள் மாறியுள்ளனர். இந்த ஆண்டு 99.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து