முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.68 லட்சம் கோடி : மத்திய நிதியமைச்சகம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2022      இந்தியா
GST 2021 12 27

Source: provided

புதுடெல்லி : நாட்டில் இதுவரை இல்லாத அளவாக ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ. 1.68 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரி வசூல் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏபரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ. ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி ஆகும். இதில், சி.ஜி.எஸ்.டி ரூ. 33,159 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 41,793 கோடி ஆகும். பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ. 36,705 கோடி உள்பட  ஐ.ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 81,939 கோடி ஆகும்.   

பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ. 857 கோடி உள்பட செஸ் வரி மூலம் ரூ. 10,649 கோடி கிடைத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி தொகையை விட ஏப்ரல் மாதத்தில் 25,000 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து