முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன்னை கலாய்த்த காமடி நடிகர் நோவாவிடம் ஜோ பைடன் என்ன கூறினார் தெரியுமா?

திங்கட்கிழமை, 2 மே 2022      உலகம்
Joe-Biden 2022 05 02

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபரை மேடையில் வைத்து கலாய்த்த காமெடி நடிகர்- ஜோ பைடன் என்ன கூறினார் தெரியுமா?

ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போர் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல காமெடியன் டிரிவோர் நோவா வெள்ளை மாளிகை விருந்து ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 

ரஷ்யா போன்று ஒரு மோசமான நாடு இருக்க முடியாது. அங்கே சுதந்திரம் என்பது பேச்சுக்கு கூட கிடையாது. அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னி ரஷ்ய அதிபரை விமர்சித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு அவருக்கு விஷம் வைத்து கொலை செய்யும் முயற்சியும் நடைபெற்றது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் ஜெர்மனியில் சிகிச்சை எடுத்தார். மீண்டும் அவரை கைது செய்த ரஷ்ய அரசு 9 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதித்தது.

இப்போது ரஷ்யா உக்ரைனில் போர் தொடுத்து ஆக்கிரமிப்புகளை நிகழ்த்தி வருகிறது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதே அமெரிக்காவை நினைத்து பாருங்கள். நாம் எல்லோரும் சுதந்திரமாக இருக்கிறோம். நம் நாட்டில் உங்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருப்பதாக தோணலாம் ஆனால் நம்மால் வேண்டுமான விஷயங்களை செய்ய முடியும். அமெரிக்க அதிபரை கூட நான் கலாய்த்து விட்டு அமைதியாக போய்விட முடியும். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என கூறினார்.

பின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பார்த்து நான் உங்களை கலாய்த்ததற்கு எதுவும் செய்ய மாட்டீர்கள் தானே என கிண்டலாக அவரை பார்த்து டிரேவர் நோவா கேட்டார்.  அதன்பின் பேசிய ஜோ பைடன் டிரேவர் நோவாவை பார்த்து,‘டிரேவருக்கு ஒரு நல்ல செய்தி. அமெரிக்காவில் நீங்கள் அந்நாட்டு அதிபரை கூட கலாய்க்க முடியும். அதற்காக மாஸ்கோவில் உள்ளது போல உங்களை சிறையில் அடைக்க மாட்டார்கள்’ என கூறினார். இதையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் சிரித்ததில் கலகலப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து