முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

திங்கட்கிழமை, 2 மே 2022      சினிமா
Vijay-Sethupathi 2022 05 02

Source: provided

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கதை, கதாநாயகன் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் எல்லாம் நேருக்கு மாறாக நடக்கிறது. இந்நிலையில் பகலில் கார் டிரைவராகவும் இரவில் பவுன்சராகவும் வேலை பார்த்து வருகிறார். டிரைவராக வேலை பார்க்கும்போது நயன்தாராவையும் பவுன்சராக வேலை பார்க்கும்போது சமந்தாவையும் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த காதல் பிரச்சனையாக மாறுகிறது. அந்த பிரச்சனையை விஜய்சேதுபதி எப்படி சமாளித்தார்? யாருடன் காதலில் ஒன்று சேர்ந்தார் என்பதே படத்தின் மீதிக்கதை. ராம்போ கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார். ரொமான்ஸ் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார். நயன்தாரா ஆர்ப்பாட்டமில்லாத குடும்ப பெண்ணாக நடித்துள்ளார். சமந்தா மாடர்ன் பெண்ணாக நடித்து அசத்தியிருக்கிறார்.இரண்டு நாயகிகளும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளனர். மாறன், கிங்ஸ்லி ஆகியோர் காமெடியில் கலக்கி உள்ளார்கள். அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இல்லாத இந்த படத்தை மிகவும் பொறுமையாகவே பார்க்க வேண்டி உள்ளது. மொத்தத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ – கொஞ்சமான கலகலப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!