முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமஸ்கிருத சர்ச்சை விவகாரம்: கல்லூரி மாணவர்களிடம் மதுரை மாவட்ட கலெக்டர் விசாரணை..!

திங்கட்கிழமை, 2 மே 2022      தமிழகம்
College-student 2022 05 02

சமஸ்கிருத சர்ச்சை விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவர்களிடம் மதுரை மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தினார்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் தவறுதலாக உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்த விவகாரத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். 

இதுதொடர்பாக மருத்துவ கல்லூரியின் மாணவர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

வரவேற்பு விழா நடத்துவதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. நாங்கள் பதிவிறக்கம் செய்த உறுதிமொழிப் படிவத்தை பேராசிரியர்களிடம் என யாரிடமும் காண்பிக்கவில்லை. நாங்கள் தயாரித்தது என்ன என்பது குறித்து அவர்களுக்கு தெரியாது. சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் எழுதியே வாசித்தோம். சமஸ்கிருதத்தில் படிக்கவில்லை. 

இந்த தவறுக்கு மாணவர் அமைப்பு முழுப்பொறுப்பு, முழு காரணம். உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. சமஸ்கிருதத்தில் இருக்கும் மகரிஷி சரக் சபத் உறுதிமொழி படிவத்தை ஏற்கக்கூடாது என்பது குறித்து அரசிடம் இருந்து எந்தவித தெளிவான வழிகாட்டுதல் இல்லை. நேற்று தான் அதுகுறித்த தகவல் தெரியவந்தது.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்த விவகாரம் தொடர்பாக, கல்லூரி மாணவர் தலைவர் உள்ளிட்ட 4 மாணவர்களிடம் மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் விசாரணை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து