முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏற்கனவே வெளியிடப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும்: கொரோனா தடுப்பூசி செலுத்தும்படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

திங்கட்கிழமை, 2 மே 2022      தமிழகம்
Supreme-Court 2021 07 19

கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பானையோ, உத்தரவோ பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. 

பொதுநல வழக்குகள்...

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் நேற்று(மே 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கு பின்னணி...

தமிழகம், கேரளம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வர அனுமதியில்லை என்று மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தன. இது அரசியல் சாசன உரிமைகளுக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

கட்டாயப்படுத்தக்கூடாது...

இந்நிலையில் இந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில், "எந்தவொரு தனிநபரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது. அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ் அவ்வாறு பொதுமக்களை கட்டாயப்படுத்துவது சட்ட விரோதமானது. அதேநேரம், பொது சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள், கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கை முடிவுகளை எடுக்க அதிகாரம் உள்ளது.

நீக்கிடவேண்டும்... 

ஒருவேளை கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தால், அவற்றை நீக்கிடவேண்டும். பொது இடங்களுக்கு வரக்கூடியவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவோ, அறிவிப்பாணையோ வெளியிட்டிருந்தால, அவற்றை திரும்பப் பெற வேண்டும். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதுதொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து