முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மக்களுக்கு உதவும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் டுவிட்

திங்கட்கிழமை, 2 மே 2022      தமிழகம்
Stalin 2020 07-18

இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி என்று மத்திய மந்திரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறும் கோரி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி என மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இலங்கை மக்களுக்கு உதவவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி. இதுபோன்ற மனிதாபிமான உதவிகள் இரு நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்த உதவும் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து