முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்: 24ம் தேதி வரை அனல் கக்கும்

திங்கட்கிழமை, 2 மே 2022      தமிழகம்
sun-2022-04-29

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. 24ம் தேதி வரை அனல் கக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கியது. பல மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் மாதமே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. கடந்த 3 நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 110 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28ந்தேதி வரை நீடிக்கும். குறிப்பாக 24ந்தேதி வரை அனல் கக்கும்.

மேலும் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பான அளவை விட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 13 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் வெயில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். இரவில் புழுக்கம் அதிகமாக காணப்படும். எனவே பகல் நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களை தவிர வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வெப்பத்தை தணிக்க இளநீர், மோர் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்துவது நல்லது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து