முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாடிகனில் போப் பிரான்சிஸ் உடன் இன்று ஜப்பான் பிரதமர் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      உலகம்
Pope 2022 05 03

Source: provided

டோக்கியோ : ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா வாடிகனில் இன்று போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேசுகிறார்.

ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.  கடந்த வெள்ளி கிழமை தொடங்கிய இந்த பயணத்தில் இந்தோனேசியா, வியட்னாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார். 

இதனை தொடர்ந்து நேற்று  இத்தாலி நாட்டுக்கு சென்ற புமியோ கிஷிடா, அதன்பின்பு இங்கிலாந்து நாட்டுக்கு அவர் செல்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா வாடிகனில் இன்று போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேசுகிறார்.  இதனை ஜப்பானில் இருந்து வெளியாகும் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.  

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே 2014-ம் ஆண்டு வாடிகனுக்கு பயணம் மேற்கொண்டார்.  8 ஆண்டுகளுக்கு பின்பு முதன்முறையாக வாடிகனுக்கு ஜப்பான் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்த சந்திப்பில், அணு ஆயுதங்களற்ற உலகிற்கான ஆதரவை போப் பிரான்சிஸிடம் ஜப்பானிய பிரதமர் கிஷிடா கோருவார் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து