முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பாக். வீரர்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      விளையாட்டு
Hassan-Ali 2022 05 03

Source: provided

பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வருபவர் ஹசன் அலி. பவுலரான அவர் மூன்று பார்மெட்டுகளையும் சேர்த்து 223 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2021 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் அவர் கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார். அப்போது முதலே அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹசன் அலி பேசியுள்ளார்.

தற்போது கவுன்டி கிரிக்கெட்டில் லங்காஷயர் அணிக்காக விளையாடுவதற்காக இங்கிலாந்தில் உள்ளார் ஹசன் அலி. அவர் பேசுகையில் "ஒட்டுமொத்தமாக அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் நான் சிறப்பாக விளையாடி உள்ளேன். அறிமுகமான நாள் முதல் தேசிய அணியில் நான் தான் இரண்டாவது சிறந்த பவுலராக உள்ளேன். அப்படி இல்லையெனில் முதலிடம். ஒரு வீரரால் எல்லா நேரமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. கடந்த காலங்களில் இது மாதிரியான விமர்சனங்களை பல ஜாம்பவான்கள் எதிர்கொண்டுள்ளனர். என்னிடம் விடாமுயற்சி உள்ளது. அதன் மூலம் எனது குறைகளை நிறைகளாக மாற்றுவேன். அதனால் தான் பாபர் ஆஸம் என்னை ஆதரிக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

____________

ஆஸி. அணியின் உதவி பயிற்சியாளர் நியமனம்

ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த ஜஸ்டின் லாங்கரின் 4 வருட பதவி காலம் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் மெக்டோனால்ட் பதவியேற்றார். இந்நிலையில் உதவி பயற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் போது ஆஸ்திரேலியா அணிக்கு தற்காலிக அறிவுரையாளராக டேனியல் விட்டோரி இருந்தார். இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளருடன் சேர்ந்து விட்டோரி, மைக்கேல் டி வெனுடோ தனது பணியை தொடர்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருவரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

_____________

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மிரள வைக்கும் ரசிகர்களின் பேனர்கள்

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் யாரும் எதிர்ப்பார்க்காத சென்னை, மும்பை அணிகள் கடைசி 2 இடத்தைப் பிடித்துள்ளது. இந்த சீசனில் ரசிகர்களின் பேனர் வசனங்கள் கிரிக்கெட் வீரர்களை மட்டுமல்லாமல் ஐபிஎல் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது.

பெங்களூர்-மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோலி ரசிகையின் பேனர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ரசிகை கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துள்ளார். போட்டியின் போது வைத்திருந்த பேனரில் விராட் கோலி தனது 71-வது சதத்தை எப்போது அடிக்கிறாறோ அப்போதுதான் நான் டேட்டிங் செய்வதாக இருந்தது. இந்த வாசகம் சமூக வலைதளங்களில் வைரலானது. 

________________

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரஷ்ய அணிகளுக்கு தடை

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு பல்வேறு விளையாட்டு அமைப்புகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு ரஷியா மீது அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அடுத்த சீசன் சாம்பியன் லீக் மற்றும் பிற அனைத்து ஐரோப்பிய போட்டிகளிலும் ரஷிய கிளப் கால்பந்து அணிகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை ஐரோப்பிய கால்பந்து சங்க நிர்வாக குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “2022-23ம் ஆண்டு சீசனில் கிளப் போட்டிகளில் எந்த ரஷிய கிளப் அணிகளும் விளையாட அனுமதி கிடைக்காது. மேலும் அறிவிப்பு வரும் வரை ரஷிய கிளப் அணிகள் மற்றும் தேசிய அணிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தில் ஜூலை மாதம் நடக்கும் பெண்கள் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து ரஷிய அணி விலக்கப்பட்டது. அதற்கு பதில் போர்ச்சுக்கல் அணி இடம் பெற்றது. மேலும் 2028 அல்லது 2032ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி நடத்தும் ரஷியாவின் முயற்சியும் தகுதி இல்லாதது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

_____________

ஐதராபாத் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு மீண்டும் காயம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் கை பெருவிரலுக்கும், அதற்கு அடுத்த விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 3 லீக் ஆட்டங்களை தவற விட்டு அணிக்கு திரும்பினார். 

இந்த நிலையில் புனேயில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்யும் போது அதே கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த ஆட்டத்தில் பந்து வீசவில்லை. வாஷிங்டன் சுந்தர் காயம் குறித்து ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி கருத்து தெரிவிக்கையில், ‘வாஷிங்டன் சுந்தர் காயத்துக்கு தையல் போட வேண்டியது இருப்பதால் அவர் டெல்லிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் (வருகிற 5-ந் தேதி) விளையாடுவது சந்தேகம் தான். எங்களது முக்கிய பவுலர்களில் ஒருவரான வாஷிங்டன் சுந்தர் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக பந்து வீச முடியாமல் போனது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது’ என்றார்.

________________

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பூரன் நியமனம்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒருநாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் அதிரடியாக ஆடி ஆல்ரவுண்டராக செயல்பட்டு வருபவர் பொல்லார்டு. வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக  செயல்பட்டு வந்தவர் கெய்ரன் பொல்லார்டு. இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டி கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து