முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டம்: ரிங்குசிங்-க்கு கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      விளையாட்டு
Sreyas 2022 05 03

ராஜஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆடிய ரிங்குசிங்-க்கு கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். வலை பயிற்சியில் உமேஷ் யாதவுக்கு எதிராக பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

36 ரன்கள்...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. வெற்றி குறித்து கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது., பவர்பிளேவில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பவர்பிளேயில் 36 ரன்களை விட்டு கொடுத்து விக்கெட்டை கைப்பற்றினர். அது போன்ற தொடக்கம் தான் எங்களுக்கு தேவைப்பட்டது.

மிகவும் கடினம்... 

உமேஷ் யாதவ், கடினமான நீளங்களை வீசுகிறார். அவர் தனது வேகத்தை அதிகரித்துள்ளார். வலை பயிற்சியில் அவருக்கு எதிராக பேட்டிங் செய்வது மிகவும் கடினம். அவரிடம் நிறைய திட்டங்கள் உள்ளது. அதை அறிவது மிகவும். கடினம். ஒரு கேப்டனாக நீங்கள் அவருக்கு பந்தை கொடுக்கும் போது அவர் எப்போதும் திட்டங்களை செயல்படுத்த தயாராக இருப்பார். சுனில் நரேன் அணிக்கு ஒரு பெரிய சொத்து. அவரிடம் நான் எப்போது பந்தை கொடுக்கிறேனோ விக்கெட்டுகளை எடுக்க தயாராக இருக்கிறார். அதே நேரத்தில் மிகவும் சிக்கனமான பந்து வீச்சாளராக இருக்கிறார். அவர் பெரிய விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார்.

சிறந்த சொத்தாக... 

ரிங்கு சிங்கை பற்றி நான் டிரசிங் அறையில் சக வீரர்களுடன் பேசி கொண்டிருந்தேன். அவர் தனது 2வது அல்லது 3வது ஆட்டத்தில் விளையாடும்போது, நெருக்கயான சூழ்நிலைகளிலும் அமைதியாக இருந்த விதம் மிகவும் சிறப்பானது. அந்த சூழலில் நிதிஷ்ராணாவுடன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது பாராட்ட வேண்டிய விஷயம். எதிர்காலத்தில் ரிங்கு சிங் அணிக்கு ஒரு சிறந்த சொத்தாக இருப்பார் என்றார்.

வெளிப்படுத்தினோம்...

ராஜஸ்தான் கேப்டன் சஞ்சுசாம்சன் கூறும்போது, ஆடுகளம் சற்று மெதுவாக இருந்தது. அவர்கள் (கொல்கத்தா) நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் கடைசி கட்டத்தில் நாங்கள் சில பவுண்டரிகளை அடித்திருக்க வேண்டும். 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம் என்று நினைக்கிறேன். பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் போராட்டத்தை வெளிப்படுத்தினோம். பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்றார். கொல்கத்தா அணி 4வது வெற்றியை (10 ஆட்டம்) பெற்றது. ராஜஸ்தான் 4வது தோல்வியை (10 ஆட்டம்) சந்தித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து