முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரை ஓட்டி சேதப்படுத்திய சிறுவனுக்கு பொம்மை வாங்கி கொடுத்த போலீசார்

புதன்கிழமை, 4 மே 2022      உலகம்
Netherlands 2022 05 04

Source: provided

ஆம்ஸ்டெர்டாம் : நெதர்லாந்து நாட்டில் நான்கு வயது சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் காரின் சாவியை எடுத்து காரை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. சிறுவன் வீட்டிலிருந்த தன் அம்மாவின் கார் சாவியை எடுத்து யாருக்கும் தெரியாமல் காரை இயக்க முயன்றுள்ளான். அருகே இருந்த பிற கார்களையும் சேதப்படுத்தியுள்ளான்.

அப்போது காரின் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தி காரை இயக்கியபோது கார் கட்டுப்பாடின்றி சென்று அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் மோதியுள்ளது. இதை பார்த்தவர்கள் போலீசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அங்கு வந்த போலீசார் கார்களை அப்புறப்படுத்தி அந்த சிறுவனைக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

சிறுவனை விசாரித்த போலீசார், சிறுவனின் அப்பா அலுவலகம் சென்ற போது, அவன் அம்மாவின் கார் சாவியை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து வந்து காரை இயக்கியுள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் சிறுவனின் பெற்றோரை போனில் அழைத்து வரச் சொல்லியுள்ளனர். 

மேலும் பெற்றோர் வரும் வரை சிறுவன் அழாமல் இருக்க போலீசார் சாக்லேட், பொம்மைகள்  வாங்கி கொடுத்து  பத்திரமாக பார்த்துக் கொண்டனர். இதுபற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்ட போலீசார், அந்த சிறுவனை 2021-ன் பார்முலா-ஒன் கார் சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டப்பனோடு உடன் ஒப்பிட்டு, இந்த சிறுவன் புதிய மேக்ஸ் வெர்ஸ்டப்பன் என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து