முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

புதன்கிழமை, 4 மே 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை :  தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மே 5) தொடங்கி 28-ம் தேதி வரை நடக்க உள்ளது. இத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் இருந்து 8.60 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதில் 28,353 தனித் தேர்வர்கள், 3,638 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 73 சிறை கைதிகள் ஆகியோரும் அடங்குவர். இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

நாளை(இன்று) பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள்(நாளை) பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்.  நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல.  நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க என்று அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!