முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரம் ஆதீனம் பல்லக்கு நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டும் : இ.பி.எஸ். கோரிக்கை

புதன்கிழமை, 4 மே 2022      தமிழகம்
EPS 2022 03 16

Source: provided

சென்னை : தருமபுரம் ஆதீனம் பல்லக்கு நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். 

தமிழக சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரமில்லா நேரத்தில் பேசிய போது கூறியதாவது:-

பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில், 500 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இது இந்த ஆதீனத்தில் மட்டுமல்ல, திருவாடுதுறை ஆதீனத்திலும் நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு, 22.5.2022 அன்று, வைகாசி மாதம் 8-ம் நாள், ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த தருமபுரம் ஆதீனத்தின் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செல்லும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிபுரியும் போது கூட இந்த பட்டின பிரவேச நிசழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதில்லை. இது அப்பகுதி மக்களிடையே வருத்தத்தையும், வேதனையையும், அரசின் மீது கடுமையான எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

முதல்வர் கடந்த வாரம் மாநிலத்திலுள்ள பல மடாதிபதிகளை அழைத்து தலைமைச்செயலகத்தில் அவர்களோடு கலந்துரையாடி உள்ளார். மேலும் மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவக்கப்படும் என்று அறிவித்தவுடன், புதிய மாவட்ட நிர்வாகத்திற்கு தேவைப்படும் அலுவலகங்கள், மருத்துவக் கல்லூரி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் கட்ட இடம் வேண்டும் என்றவுடன், 60 ஏக்கர் நிலத்தை உடனடியாக வழங்கியது இந்த தருமபுரம் ஆதீனம் என்பதை இங்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். எனவே ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சிக்கு இந்த அரசு அனுமதி அளிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து