முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 4 மே 2022      தமிழகம்
Weather-Center 2022 01-09

Source: provided

சென்னை : அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்றும் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 5-ம் தேதி (இன்று), 6-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன்படி இன்று (மே 5) தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு,  கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

6-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு,  தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

7-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும்.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக 6-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக 5-ம் தேதி, அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

6-ந்தேதி, அந்தமான் கடல், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து