முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம் : வெயிலின் தாக்கம் காரணமாக தமிழக அரசு அறிவிப்பு

புதன்கிழமை, 4 மே 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் காரணமாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அக்னி நட்சத்திரம்...

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், பகலில் மக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் இளநீர், தர்பூசணி பழக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. இதனால் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முதல்வருடன் ஆலோசனை...

தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வருகிற 28-ம் தேதி வரை இது நீடிக்கும் நிலையில், வரும் 24ம் தேதி வரை அனல் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். 

கோடை விடுமுறை...

தமிழகத்தில் கட்டாய கல்வி திட்டத்தின் அடிப்படையில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விடப்படும் கோடை விடுமுறை 5 வகுப்பு வரை ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு மட்டுமா அல்லது 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படுமா என கேள்வியும் எழுந்துள்ளது. பள்ளி மாணவர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு எழுத மட்டும்...

பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது., இதில் 1 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும். தேர்வு இல்லாத நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம். வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து