முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரவை முடிவுக்கு முரணாக கவர்னர் ஏன் முடிவெடுக்க வேண்டும்? - பேரறிவாளன் விவகாரத்தில் நாங்களே முடிவெடுப்போம் : சுப்ரீம் கோர்ட் பரபரப்பு கருத்து

புதன்கிழமை, 4 மே 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : பேரறிவாளன் விவகாரத்தில்  நாங்களே முடிவெடுப்போம் என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் அமைச்சரவை முடிவுக்கு முரணாக கவர்னர் ஏன் முடிவெடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

அவசியமே இல்லை...

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடரப்பட்ட வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விடுதலை அளிக்கக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் கவர்னர் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் உள்ளார் என வாதிடப்பட்டது. கவர்னரின் நடவடிக்கை குறித்து ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்த சுப்ரீம் கோர்ட், பேரறிவாளன் விடுதலை விவகரத்தில் அமைச்சரவை முடிவெடுத்தபின் கவர்னர் முடிவெடுக்க அவசியமே இல்லை என தெரிவித்துள்ளது.

காலதாமதம் ஏன்? 

இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவிக்கையில்., பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்க முடிவெடுக்க காலதாமதம் ஏன்? இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது ஏன்? மத்திய அரசு முடிவை அறிவிக்கவில்லை என்றால் நாங்கள் முடிவை அறிவிக்க வேண்டியது இருக்கும். மேலும் இந்த விவகாரத்தில் கவர்னரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம். அமைச்சரவையின் பரிந்துரையை கவர்னர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பிவைத்தாரா என்று விசாரித்து வருகிறோம். 

காத்திருக்க மாட்டோம்...

பேரறிவாளன் விடுதலை குறித்து அமைச்சரவை முடிவெடுத்தபின் கவர்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால் கூட்டாட்சி தத்துவத்திற்கு என்ன அர்த்தம்? பரிந்துரை தொடர்பாக குடியரசுத்தலைவர் முடிவெடுக்கலாம் அல்லது கவர்னருக்கே அனுப்பி வைக்கலாம்.  நாங்கள் குடியரசுத்தலைவரின் முடிவிற்காக காத்திருக்க மாட்டோம்.

அமைச்சரவை முடிவுக்கு... 

கண்மூடிக்கொண்டு இருக்க முடியாது. அனைவரும் அரசியல் சாசனத்தை பின்பற்றி நடக்க வேண்டும். அமைச்சரவை முடிவுக்கு முரணாக கவர்னர் ஏன் முடிவெடுக்க வேண்டும்? சட்டம் தொடர்பான கேள்விகளில் பேரறிவாளன் அக்கறை கொள்ளவில்லை தனது சுதந்திரம் தொடர்பாகவே பேரறிவாளன் ஆர்வம் கொண்டுள்ளார். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து