முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவநிலை மாற்றத்தை இந்தியா நேரடியாகவே எதிர்கொள்கிறது : பிரதமர் நரேந்திரமோடி பேச்சு

புதன்கிழமை, 4 மே 2022      இந்தியா
modi-1-2021-12-16

Source: provided

புதுடெல்லி : பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்பு மாநாட்டில் இன்று துவக்க உரையாற்றினார். அப்போது பருவநிலை மாற்றத்தை இந்தியா நேரடியான வழியில் எதிர்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான நான்காவது சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று துவக்கி வைத்து உரையாற்றினார்.  ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், கானா அதிபர் நானா அட்டோ டன்க்வா அகுபோ-அட்டோ, ஜப்பான் பிரதமர் ப்யூமியோ கிஷிடா மற்றும் மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி நாரினா ரஜோலினா ஆகியோரும் நிகழ்ச்சியில் உரையாற்றினார்கள். 

பிரதமர் மோடி பேசியதாவது., “ஒருவரும் விடுபட்டு விடக்கூடாது என்பதே நிலையான வளர்ச்சி இலக்குகளின் உள்ளார்ந்த நோக்கம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். அதனால்தான் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், அவர்களது விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலும், அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக உள்ளோம்.

பருவநிலை மாற்றத்தை இந்தியா நேரடியான வழியில் எதிர்கொள்கிறது. எந்த ஒரு உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பயணத்திலும் மக்கள்தான் மையமாக இருக்கவேண்டும். அதை தான் இந்தியாவில் நாங்கள் செய்கிறோம். உள்கட்டமைப்பை நெகிழ்திறன் வாய்ந்ததாக நாம் மாற்றினால், நமக்காக மட்டுமல்லாமல், பல எதிர்கால தலைமுறையினருக்கும் பேரிடர்களை நாம் தடுக்கலாம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து