முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல் தொழில்நுட்பவியல் துறையின் பெயர் மாற்றம் : சட்டசபையில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

புதன்கிழமை, 4 மே 2022      தமிழகம்
Mano-Thankaraj 2022 04 22

Source: provided

சென்னை : தகவல் தொழில்நுட்பவியல் துறையின் பெயர் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என மாற்றம் செய்யப்படும் என்று நேற்று சட்டசபையில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது., மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் மற்றும் மின் ஆளுகையின் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கத்துடனும், தகவல் தொழில்நுட்பவியல் துறை 5-10-1998 அன்று உருவாக்கப்பட்டது. 

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைத் துறைகளின் வளர்ச்சியானது ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். எனவே ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவதற்கு முன்முயற்சியுடன் கூடிய ஒருங்கிணைந்த கொள்கைவழி அணுகுமுறை தேவைப்படுகிறது. 

முதல்கட்டமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப பிரிவுக்கு தலைமை தாங்கும் வகையில், தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி, தகவல் தொழில்நுட்பவியல் துறையில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்பங்களில் தொடக்கநிலை நிறுவனங்கள் மூலம் புதுமைகளை உருவாக்குவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் ஒன்று சென்னையில் அரசால் நிறுவப்பட்டு வருகிறது. 

எனவே மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளின் வளர்ச்சியை வலுப்படுத்த இத்துறை, “தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என மறுபெயரிடப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து