முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க இதுவரை 170 நாடுகள் முன்பதிவு: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

புதன்கிழமை, 4 மே 2022      விளையாட்டு
Meyyanathan 2022 05 04

வருகிற ஜூலை மாதம் 28ந்தேதி சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க இதுவரை பல்வேறு நாடுகளை சேர்ந்த 170க்கும் மேற்பட்ட நாடுகள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு பெருமை...

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது., வருகிற ஜூலை மாதம் 28ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க இதுவரை பல்வேறு நாடுகளை சேர்ந்த 170க்கும் மேற்பட்ட நாடுகள் பதிவு செய்துள்ளன. தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி ஷாலினி ஆகியோர் ஒரே போட்டியில் பங்கேற்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாகும். 

மேலும் பல நாடுகள்...

இன்னும் பல நாடுகள் இப்போட்டியில் பங்கேற்க பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம், அகில இந்தியா செஸ் கூட்டமைப்பும், உலக செஸ் ஒலிம்பியாட் கூட்டமைப்பும் சேர்ந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணி நான்கு குழுக்களாக பங்கேற்கிறது. இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிக்கு விரைவில் பயிற்சி அளிக்கும் பணி தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து