முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் கிரிக்கெட் வீரர் அருண் லாலுக்கு திருமணம்

புதன்கிழமை, 4 மே 2022      விளையாட்டு
Arun-Lal 2022 05 04

Source: provided

1982 முதல் 1989 வரையில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியவர் அருண் லால். பின்னர், கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்யும் பணியை கவனித்து வந்தார். இப்போது பெங்கால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். அவரது பயிற்சியின் கீழ் அபாரமான ஆட்டத்தை டொமஸ்டிக் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தி உள்ளது மேற்கு வங்க அணி. இந்நிலையில், அவர் இப்போது தன் நீண்ட கால நண்பரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இவர்களின் திருமணத்தையொட்டிய நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வைரலானது. அருண் லால், தனது முதல் மனைவி ரீனாவை பிரிந்துவிட்டார். முதல் மனைவியின் அனுமதியுடனே தற்போது 38 வயது புல்புல்லை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என சொல்லப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டுள்ள அவரது முதல் மனைவி ரீனாவை இரண்டாவது மனைவியுடன் அருண் லால் கவனித்துக் கொள்வார் எனவும் நெருங்கிய உறவுகள் தெரிவித்துள்ளனர்.

_____________

சாஹாவுக்கு மிரட்டல் விடுத்த பத்திரிகையாளருக்கு தடை

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா. முன்னாள் கேப்டன் டோனியின் ஓய்வுக்கு பிறகு இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார்.  சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான  டெஸ்ட் தொடரில் இவர் தேர்வுசெய்யப்படவில்லை. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட விளையாட்டு பத்திரிகையாளர் குறுஞ்செய்தியின் மூலம் கேலி செய்தி மிரட்டியதாக விருத்திமான் சாஹா  பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார்.

இது குறித்து அந்த பத்திரிகையாளர் உடன் நடந்த உரையாடல் குறுஞ்செய்தியை விருத்திமான் சாஹா வெளியிட்டார். ஆனால் அந்த பத்திரிகையாளர் பெயரை அப்போது அவர் வெளியிடவில்லை. பின்னர் பிசிசிஐ விருத்திமான் சாஹா-விடம் முழுமையான விசாரணை நடத்தியது. பின்னர் போரியா மஜும்தார் என்ற அந்த பத்திரிகையாளர் தானாக முன்வந்து சாஹா உடன் நடந்த உரையாடல் குறித்து விளக்கம் அளித்து இருந்தார். பிசிசிஐ அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல் வெளியானது .இந்நிலையில் பத்திரிகையாளர் போரியா மஜும்தார்க்கு 2 ஆண்டுகள் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது 

______________

இளம் வீரருக்கு தீபக் சாஹர் வழங்கிய அறிவுரை..!!

சென்னை அணியின் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பந்துவீச்சு சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை. குறிப்பாக பவர்பிளே-வில் சென்னை அணி தொடக்க போட்டிகளில் அதிக ரன்களை வாரி வழங்கியது. ஒரு பக்கம் ரன்கள் போனாலும் சென்னை அணியின் முகேஷ் சவுத்ரி பந்துகளை நன்றாக ஸ்விங் செய்கிறார்.இதனால் கடந்த சில போட்டிகளில் அவர் அதிக விக்கெட் வீழ்த்த தொடங்கியுள்ளார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய அவர் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்த நிலையில் தற்போது முகேஷ் சவுத்ரி சென்னை அணியின் மற்றொரு பந்துவீச்சாளரான தீபக் சாஹர் தனக்கு அறிவுரை வழங்கியது குறித்து பேசியுள்ளார். தீபக் சாஹரின் அறிவுரை குறித்து முகேஷ் சவுத்ரி கூறுகையில், " தீபக் அற்புதமான பந்து வீச்சாளர். நான் அவருடன் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறேன், அவர் எனக்கு பல விஷயங்களை கற்று தருகிறார். ஐதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை எடுத்த போது சாஹர் என்னை பாராட்டினார். குறிப்பாக டோனி கூறும் ஆலோசனையை கேள் என கூறினார். தீபக் சாஹரின் வார்த்தைகள் எனக்கு ஊக்கமளித்தன” என முகேஷ் சவுத்ரி தெரிவித்தார்.

____________

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ரவுண்டு ஆப் 32 சுற்றில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரான்சை சேர்ந்த மோன்பில்ஸ் உடன் மோதினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 6-3 , 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இவர் அடுத்த சுற்றில் தரவரசையில் 78-வாத்து இடத்தில் இருக்கும் இங்கிலாந்து  நாட்டை சேர்ந்த ஆண்டி முர்ரே உடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறார்.

அதே போல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தய சுற்றில் இங்கிலாந்து நாட்டின் முன்னணி வீராங்கனையும் அமெரிக்க ஓபன் சாம்பியனுமான எம்மா ரடுகானு 2-6 , 6-2, 4-6 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனையிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

_______________

மோசமான வீரராகி விடமாட்டீர்கள்: கோலி குறித்து டிவில்லியர்ஸ் கருத்து

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெங்களூரு அணிக்காக நடப்பு சீசனில் முதல் 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். பின்னர் கடந்த போட்டியில் அவர் அரைசதம் அடித்தார்.  இந்த நிலையில் கோலியின் பேட்டிங் "ஃபார்ம்" பற்றி அந்த அணியின் முன்னாள் அதிரடி வீரரும் தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவானுமாகிய ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், " ஒரு பேட்ஸ்மேன் ஆக தொடர்ந்து நீங்கள் மோசமான "ஃபார்மில்" இருந்தால்  அதிலிருந்து மீள்வது கடினம். மோசமான ஃபார்மிற்கு ஒரு சதவீதத்தை வைக்க முடியாது.அதே நேரத்தில் நீங்கள் ஒரே இரவில் மோசமான வீரராக ஆகிவிடமாட்டீர்கள். அதை விராட் கோலி அறிவார் அது எனக்கும் நன்கு தெரியும். இவ்வாறு தான் நீங்கள் யோசிக்க வேண்டும். நீங்கள் விளையாடும் போதெல்லாம் உங்களுக்கு தெளிவான மனமும் புத்துணர்ச்சியும் தேவை. இதை தொடர்ந்தால் மோசமான "ஃபார்மில்" இருந்து மீள நிச்சயம் ஒரு வழியைக் கண்டுபிடிக்கலாம் " என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து