முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்காக என்னை விளையாட தூண்டியது டோனியில் சிக்ஸர்தான்..! சி.எஸ்.கே பவுலர் முகேஷ் சவுத்ரி பேட்டி

புதன்கிழமை, 4 மே 2022      விளையாட்டு
Mukesh-Chaudhary 2022 05 04

2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டோனி சார் அடித்த சிக்ஸர் தான் இந்தியாவுக்காக நான் விளையாட வேண்டுமென்ற இன்ஸ்பிரேஷனை எனக்கு கொடுத்து" எனத் தெரிவித்துள்ளார் சிஎஸ்கே பவுலர் முகேஷ் சவுத்ரி.

11 விக்கெட்கள்...

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் யூனிட்டில் ஒரு பவுலராக விளையாடி வருகிறார் முகேஷ் சவுத்ரி. 25 வயதான அவர் மகாராஷ்டிரா அணிக்காக டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவரை, அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் வாங்கியிருந்தது சிஎஸ்கே. நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் முகேஷ்.

டோனியின் சிக்ஸர்...

இந்நிலையில், இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு தனக்கு வர காரணமே டோனியின் ஆட்டம்தான் என்று அவர் சொல்லியுள்ளார். "இந்தியாவின் வெற்றிக்காக டோனி சார் விளாசிய அந்த சிக்ஸரை பார்க்கும் போதெல்லாம் எனது உடம்புக்குள் சிலிர்ப்பு ஏற்படும். எதிர்முனையில் நின்றிருந்த யுவராஜ் சிங்கை, டோனி கட்டி அணைத்து வெற்றியைக் கொண்டாடியிருப்பார். அந்த நொடியே இந்தியாவுக்காக நாமும் ஒருநாள் விளையாட வேண்டுமென நான் முடிவு செய்தேன். அதற்கு முன்பும் நான் கிரிக்கெட் விளையாடி வந்தேன். ஆனால் அதன் பிறகு எனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தினேன். அந்த வெற்றி குறித்து டோனி சாருடன் பேசி இருந்தேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து