முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வணிகர் தினம்: தினகரன் டுவிட்டரில் வாழ்த்து

வியாழக்கிழமை, 5 மே 2022      தமிழகம்
TTV 2022 03 10

நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை ஆட்சியாளர்களிடம் இருந்து வணிகர்கள் பெறுவதற்கு அ.ம.மு.க. என்றும் துணை நிற்கும் என்று வணிகர் தினத்தையொட்டி அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வணிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை அளிக்கும் அனைத்து நிலை வணிகப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த வணிகர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இடையூறுகளில் இருந்து மேலெழுந்து வரவும், எல்லா சவால்களிலும் ஒற்றுமையோடு நின்று வணிகர்கள் வெற்றி பெற்றிடவும் இந்த நாள் வழிவகுக்கட்டும். நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை ஆட்சியாளர்களிடம் இருந்து வணிகர்கள் பெறுவதற்கு அ.ம.மு.க. என்றும் துணை நிற்கும். இவ்வாறு தனது டுவிட்டர் பதிவில் தினகரன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து