முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுநிலை மருத்துவ நீட் தேர்வை ஒத்தி வைக்க அன்புமணி கோரிக்கை

வியாழக்கிழமை, 5 மே 2022      தமிழகம்
Anbumani-2022-05-05

முதுநிலை மருத்துவ படிப்புக்கான  நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மருத்துவ மாணவர்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளன. அந்த கோரிக்கைகள் நியாமானவை. அவற்றை மத்திய அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.  சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டிருந்த ஓ.பி.சி. இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மிகவும் தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதனால் மாணவர் சேர்க்கை தாமதமாகக் கூடும். 

 

கலந்தாய்வு தாமதமானதால், 2021-ம் ஆண்டில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மாணவர்களால், 2022-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராக முடியவில்லை. திட்டமிட்டபடி நீட் தேர்வுகள் 21-ம் தேதி நடத்தப்பட்டால், பல மாணவர்களுக்கு வெற்றி பெற சமவாய்ப்பு கிடைக்காது. நீட் தேர்வை சில வாரங்கள் ஒத்திவைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி தான் நடை பெற்றது. மாணவர்கள் நலனே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நடப்பாண்டிற்கான முதுநிலை மருத்துவ நீட் தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து