முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

வியாழக்கிழமை, 5 மே 2022      விளையாட்டு
Weather-Center 2022 01-09

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக  தமிழகத்தில் மதுரை தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது., வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால்பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2- 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். 

சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்த்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து